அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பிசினஸ் பள்ளியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டி வந்து அசத்தினார்.
படப்பிடிப்பு பணிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் அங்கு ஹார்வர்டு பிசினஸ் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அங்கு தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டி வந்து அசத்தினார். அமெரிக்க பயணம் என்றாலே ‘கோட்-சூட்’ அணிந்து செல்பவர்கள் மத்தியில், வேட்டியில் கமல்ஹாசனை பார்த்த அமெரிக்க வாழ் தமிழர்களும், அமெரிக்கர்களும் வியந்து பாராட்டினார்கள்.
வேட்டி கட்டி மிடுக்காக கமல்ஹாசன் நடந்து வந்த போது பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.
பின்னர் நிருபர்கள் அவரை பேட்டி கண்டனர். ரஜினியுடன் கூட்டணி சேருவீர்களா? என்று கேட்டதற்கு கமல்ஹாசன் பதில் அளிக்கையில் அரசியலில் ரஜினியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு இல்லை என்று சூசகமாக தெரிவித்தார்.
நானும் ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்கள். ஆனால் நட்பு வேறு. அரசியல் என்பது வேறு. எங்களுடைய நோக்கங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. ஆனால் சில வழிகள் மூலம் தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
ரஜினிகாந்தின் தேர்தல் அறிவிக்கைக்காக காத்திருப்போம். நானும் விரைவில் அறிவிக்க உள்ளேன். ரஜினியின் முதல் அறிவிப்பு குறித்து யோசிக்க வேண்டி இருக்கிறது. அது காவிக்கான அரசியலாக இருக்காது என்று நம்புகிறேன். ரஜினியின் கொள்கையின் அடிப்படையிலேயே அவருடனான கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். என்றார்.
0 comments:
Post a Comment