Saturday, 7 April 2018

வரலாற்றில் இன்று *📆07.04.2018📆*

Posted By: Tamil Youtube - April 07, 2018
வரலாற்றில் இன்று

*📆07.04.2018📆*

🎙ஏப்ரல் 7 கிரிகோரியன் ஆண்டின் 97 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 98 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 268 நாட்கள் உள்ளன.

*✒நிகழ்வுகள்*

▫1521 – பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார்.

▫1541 – பிரான்சிஸ் சேவியர் போர்த்துக்கீச இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு லிஸ்பன் நகரில் இருந்து புறப்பட்டார்.

▫1795 – பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது.

▫1827 – ஆங்கிலேய வேதியியலாளர் ஜோன் வோக்கர் தான் கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்டார்.

▫1906 – வேசுவியஸ் மலை தீக்கக்கியதில் நேப்பில்சில் பலத்த சேதம் ஏற்பட்டது.

▫1906 – ஸ்பெயின், மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் மொரோக்கோ வந்தது.

▫1927 – முதலாவது தொலை தூர தொலைக்காட்சி சேவை வாஷிங்டன் டிசி, நியூயோர்க் நகரம் ஆகியவற்றிற்கிடையில் இடம்பெற்றது.

▫1928 – வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.

▫1939 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி அல்பேனியாவை முற்றுகையிட்டது.

▫1942 – இரண்டாம் உலகப் போர்: ஆட்மிரால்ட்டி தீவுகளை ஜப்பான் கைப்பற்றியது.

▫1943 – யூதப் படுகொலைகள்: உக்ரேனில் டெரெபோவ்லியா என்ற இடத்தில் நாசிகள் 1,100 யூதர்களை அரை நிர்வாணமாக்கி நகர வீதிவழியே அழைத்துச் சென்று பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்று புதைத்தனர்.

▫1945 – இரண்டாம் உலகப் போர்: உலகின் மிகப்பெரும் போர்க்கப்பலான ஜப்பானின் யமாட்டோ ஓக்கினாவா அருகில் தென்கோ நடவடிக்கையின் போது அமெரிக்கப் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டது.

▫1946 – பிரான்சிடம் இருந்தான சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.

▫1948 – உலக சுகாதார நிறுவனம் (WHO) ஐக்கிய நாடுகள் அவையால் தொடங்கப்பட்டது.

▫1948 – சீனாவில் ஷங்காயில் பௌத்தமத தலம் ஒன்று எரிந்ததில் 20 புத்த குருக்கள் கொல்லப்பட்டனர்.

▫1963 – யூகோஸ்லாவியா சோசலிசக் குடியரசாகியது. மார்ஷல் டீட்டோ அதிபரானார்.

▫1964 – ஐபிஎம் தனது System/360 ஐ அறிவித்தது.

▫1978 – யாழ்ப்பாணத்தில் இலங்கையின் காவல் துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை உட்பட பல காவல் துறையினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.

▫1978 – நியூத்திரன் குண்டு தயாரிக்கும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா கைவிட்டது.

▫1983 – ஸ்ரோரி மஸ்கிரேவ், டொன் பீட்டர்சன் இருவரும் மீள் விண்ணோடத்தில் இருந்து விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள்.

▫1989 – கொம்சொமோலெட்ஸ் என்ற சோவியத் நீர்மூழ்கிக் கப்பல் நோர்வேயில் விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

▫1992 – ஸ்ருப்ஸ்கா குடியரசு விடுதலையை அறிவித்தது.

▫1994 – ருவாண்டாவின் கிகாலியில் டூட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது.

▫2001 – மார்ஸ் ஒடிசி விண்கலம் ஏவப்பட்டது.

▫2003 – அமெரிக்கப் படைகள் பக்தாத் நகரைக் கைப்பற்றினர். சதாம் உசேனின் அரசு இரு நாட்களின் பின்னர் வீழ்ந்தது.

▫2007 – தமிழ்நாட்டில் சென்டூரில் நெடுஞ்சாலை அமைப்புக்கென கொண்டுசெல்லப்பட்ட வெடிபொருட்கள் அடங்கிய வாகனம் ஒன்று வெடித்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

*👨‍👩‍👦‍👦பிறப்புகள்*

▫1506 – பிரான்சிஸ் சவேரியார், எசுப்பானிய மதப்பரப்புனர், புனிதர், இயேசு சபையை நிறுவியவர் (இ. 1552)

▫1770 – வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1850)

▫1889 – கேப்ரியெலா மிஸ்திரெல், நோபல் பரிசு பெற்ற சிலி கவிஞர் (இ. 1957)

▫1903 – மு. பாலசுந்தரம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1965)

▫1920 – ரவி சங்கர், இந்திய சித்தார் கலைஞர் (இ. 2012)

▫1926 – பிரேம் நசீர், இந்திய நடிகர் (இ. 1989)

▫1935 – எஸ். பி. முத்துராமன் தமிழ்த்திரைப்பட இயக்குனர்.

▫1944 – கெர்ஃகாத் சுரோடர், செருமனியின் 7வது அரசுத்தலைவர்

▫1954 – ஜாக்கி சான், ஆங்காங் நடிகர்

▫1964 – ரசல் குரோவ், நியூசிலாந்து நடிகர்

*⚫இறப்புகள்*

▫1804 – டூசான் லூவர்சூர், எயிட்டி இராணுவத் தளபதி (பி. 1743)

▫1947 – ஹென்றி ஃபோர்ட், அமெரிக்க தொழிலதிபர் (பி. 1863)

▫2014 – வி. கே. மூர்த்தி, இந்திய ஒளிப்பதிவாளர் (பி. 1923)

▫2015 – கமலினி செல்வராஜன், ஈழத்து நாடக, திரைப்பட நடிகை, வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1954)

*👌🏻சிறப்பு நாள்*

🌿உலக சுகாதார நாள்

About Tamil Youtube

Organic Theme is officially developed by Templatezy Team. We published High quality Blogger Templates with Awesome Design for blogspot lovers.The very first Blogger Templates Company where you will find Responsive Design Templates.

0 comments:

Post a Comment

Copyright © 2015 Tamil Youtube

Designed by